வைட்டமின் பி12 குறைபாட்டை அலட்சியமாக எண்ணக்கூடாது. ஏனெனில் இது நரம்பு மண்டலம் மற்றும் மூளையை பாதிக்கக் கூடியது.
ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு, 2.4 mcg வைட்டமின் பி12 தேவை.
வைட்டமின் பி12 குறைபாடு உடலில் மிக அதிக அளவிலான சோர்வை ஏற்படுத்தும்.
வைட்டமின் பி குறைபாடு காரணமாக, சருமம் வெளிறி மஞ்சள் நிறமாக இருக்கும்.
வைட்டமின் பி12 குறைபாட்டால் மைக்ரைன் என்னும் ஒற்றைத் தலைவலி பிரச்சினை ஏற்படலாம்.
வைட்டமின் பி குறைபாடு குடல் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக, வீக்கம் வாயு வயிற்று உப்புசம் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.