உடல் எடையை குறைக்க நாம் பல வழிகளில் முயற்சி செய்கிறோம். குறிப்பாக தொப்பை வந்துவிட்டால், அதை சரி செய்வது மிக கடினமாகிவிடுகிறது.
அன்றாட வாழ்க்கையில் தேவை இல்லாத, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது உங்கள் உடலில் தவறான விளைவை ஏற்படுத்துகிறது.
எடை அதிகரிப்பால் பல நேரங்களில் பலர் பல சங்கடங்களுக்கு ஆளாவது உண்டு.
உடல் எடையை குறைக்க சில பழங்கள் நமக்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கும்.
ஆரஞ்சு பழத்தில் கலோரி குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் வைடமின் சி அதிகமாகவும் இருப்பதால், இது உடல் எடையை குறைக்க உதவுகின்றது.
மிகக்குறைந்த கலோரி அளவு கொண்ட தர்பூசணி பழங்களை சாப்பிட்டால் கண்டிப்பாக உடல் எடை குறையும்.
ஆப்பிளில் கலோரி குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், இதை உட்கொள்வதால் எளிதில் எடை குறையும்.
கலோரி அளவு மிகவும் குறைவாக உள்ள பப்பாளி பழத்தை தினமும் உட்கொள்வது பலனளிக்கும்.
பெர்ரிக்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் இருப்பதால் இது எடை இழப்புக்கு உதவும்.
தினமும் உணவு உட்கொள்ளும் முன் திராட்சை சாப்பிட்டால், உடல் எடை வேகமாக குறையும்.