நரம்பு தளர்ச்சியை போக்கும் குணம் கொண்ட செவ்வாழை, ஆண்மை குறைபாட்டை நீக்கும். தொடர்ந்து 48 நாட்கள் இரவு நேரத்தில் செவ்வாழை சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெற்று, விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
பீட்டா கரோட்டின் & வைட்டமின் சி நிறைந்த செவ்வாழை, நோய்த்தொற்றுகளுக்கு எதிராக நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகின்றன
தரமான நார்ச்சத்து கொண்ட செவ்வாழை குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்tஹி குடல் அழற்சியைக் குறைப்பதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
அமிலத்தன்மைக்கு எதிராக செயல்படும் செவ்வாழை, வயிற்று வலியை சீர்செய்து, நெஞ்செரிச்சலைப் போக்கும்
பொட்டாசியம் & மெக்னீசியம் அதிகமாக உள்ள செவ்வாழை, சோடியத்தின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை குறைக்கிறது, இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. மாரடைப்பு, பக்கவாதம், பிற இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது
பிரக்டோஸ், சுக்ரோஸ், குளுக்கோஸ் அடங்கிய செவ்வாழை, உண்ட உடனே சக்தியை அதிகரிப்பதுடன், நீடித்த ஆற்றலையும் வழங்குகிறது
வைட்டமின் ஏ, கரோட்டினாய்டுகள் அதிகம் உள்ள செவ்வாழை கண் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. கரோட்டினாய்டுகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது வயது தொடர்பான மாகுலர் சிதைவின் அபாயத்தைக் குறைக்கும்
மனநிலையை மேம்படுத்தும் செவ்வாழை. டிரிப்டோபானை செரோடோனினாக மாற்றுவதில் பங்கு வகிக்கும் ஊட்டச்சத்தை கொண்ட செவ்வாழை, மனச்சோர்வை சீர்செய்கிறது
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை