ரயில் பயணிகள் சொமோட்டாவில் உணவு ஆர்டர் செய்வது எப்படி?
பயணிகளுக்கு ரயிலிலேயே உணவை டெலிவரி செய்ய சொமாட்டோ நிறுவனத்துடன் ஐஆர்சிடிசி ஒப்பந்தம்
சொமோட்டா தற்போது இந்தியா முழுவதும் உணவுகளை ஆர்டர் செய்யும் செயலியாக உள்ளது
வாடிக்கையாளர்கள் விரும்பும் கடையில் உணவை ஆர்டர் செய்தால், இந்த டெலிவரி நிறுவனம் அந்த கடையில் உணவைப் பெற்று வாடிக்கையாளர் இருக்கும் இடத்திற்கே கொண்டு இந்த உணவை டெலிவரி செய்கிறது.
இந்தத் துறையில் டொமேட்டோ நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்நிறுவனம் தற்போது இந்தியாவின் ரயில்வே நிறுவனமான ஐஆர்சிடிசி உடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
அதன்படி ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு நேரடியாக ரயில் சீட்டிலேயே ஸோமாட்டோநிறுவனம் உணவுகளை டெலிவரி செய்யும் ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.
ப்ரூஃப் ஆஃப் கான்செப்ட் என்ற பெயரில் கையெழுத்திடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் படி முதற்கட்டமாக ஐந்து முக்கியமான ரயில் நிலையங்களில் மட்டும் இந்த வசதியை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி பிரயாக்ராஜ், கான்பூர், லக்னோ மற்றும் வாரணாசி ஆகிய ரயில் நிலையங்களில் இனி ஸோமாட்டோ மூலம் உணவுகளை ஆர்டர் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஐஆர்சிடிசி இ-கேட்டரிங் மூலம் செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது பண்டிகை காலம் என்பதால் ஐஆர்சிடிசி தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவைகளையும் வழங்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஐஆர்சிடிசி கேட்டரிங் சர்வீஸ் பல முக்கிய ஏற்பாடுகளை செய்து வருகிறது. குறிப்பாக நவராத்திரியை முன்னிட்டு விரதம் இருக்கும் நபர்களுக்காக சிறப்பு உணவுகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி ரயில் பயணிகள் ரயிலில் பயணிக்கும் போது அந்த பகுதியில் உள்ள லோக்கல் உணவுகளை ஆர்டர் செய்து ருசிக்க முடியும்.