ருசியா இருக்குன்னு நிறைய சாப்பிட்டீங்களா? டோண்ட் வொர்ரி! கிச்சன் கில்லாடிகள் செரிமானத்தை பாத்துக்கும்

';

செரிமானம்

உணவுப் பழக்கமும், அதில் ஏற்படும் மாற்றங்களும் நமது செரிமான அமைப்பை பாதிக்கின்றன. அதற்கு நமது சமையலறையில் இருக்கும் மசாலாக்களே நல்ல தீர்வைக் கொடுக்கின்றன.

';

சீரகம்

தைமால் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் சீரக விதைகளில் இருப்பதால், அவை உமிழ்நீர் சுரப்பியைத் தூண்டுகின்றன, இதனால் செரிமானம் சுலபமாகிறது

';

இஞ்சி

குடலில் உணவு நீண்ட நேரம் தேங்காமல் பார்த்துக்கொள்ளும் வேலையை இஞ்சி செய்வதால், செரிமானக் கோளாறுகள் இருந்தால் இஞ்சியை அதிகம் பயன்படுத்தலாம்

';

வெந்தயம்

இதில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது

';

மஞ்சள்

குர்குமின் என்ற அற்புதமான பண்பைக் கொண்டுள்ள மஞ்சள், பித்தப்பையில் பித்த உற்பத்தியைத் தூண்டி, செரிமானத்தை சீராக்குகிறது

';

சோம்பு

குடலில் வீக்கம் அல்லது எரிச்சலைத் தணிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் சோம்பைப் பயன்படுத்தலாம்

';

ஏலக்காய்

மெந்தோன் என்ற செரிமானத்திற்கு அத்தியாவசிய எண்ணெய் ஏலக்காயில் உள்ளதால், அது ஜூரண சக்தியைத் தூண்டுகிறது

';

பெருங்காயம்

வயிறு தொடர்பான பிரச்சனைகளை சீர்செய்யும் பெருங்காயம் செரிமான பிரச்சனைகளையும் போக்குகிறது. வெதுவெதுப்பான நீரில் பெருங்காயம் கலந்து குடித்தால் செரிமானம் சீராகும்

';

மிளகு

குருமிளகு, வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை தூண்டி செரிமானத்திற்கு உதவுகிறது

';

புதினா

செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டும் புதினா செரிமான செயல்முறையை எளிதாக்குகிறது. உணவுக்குப் பிறகு புதினா டீ சேர்த்துக்கொள்வது செரிமானக் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும்

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story