வால்நட்டில் இருக்கும் நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி கொழுப்பையும் குறைக்கிறது.
அவகேடோவில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு, பொடாசியம் வைட்டமின் சி, இ, கே ஆகியவை நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
பூசணி விதைகளில் அதிக அளவு மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது.
சியா விதைகளில் உள்ள ஆண்டி-ஆக்சிடெண்டுகள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் ஆகியவை சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
இஞ்சியில் அதிக அளவு ஆண்டி-ஆக்சிடெண்டுகள் உள்ளன. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.
கீரையில் உள்ள பொடாசியம் நீரிழிவு நோயாளிகளுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றது.
உடலில் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் இலவங்கப்பட்டை மிக உதவியாக இருக்கும்.
வேப்பிலையில் உள்ள ஊட்டசத்து கூறுகள் நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டிய இலைகள் ஆகும்.