மூட்டு வலி இந்நாட்களில் பலரை பாடாய் படுத்தும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
எலும்புகளுக்கு வலுவூட்டி மூட்டு வலியை முடக்கிப்போடும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கே காணலாம்.
மஞ்சளில் உள்ள குர்குமின்னில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முழங்கால் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும். இதில் இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.
இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சிறிய வலிகள் மற்றும் காயங்களை திறம்பட நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக இது குளிர்காலத்திற்கு மிக ஏற்றாதாக இருக்கும்.
முழங்கால் வலி வீக்கத்தால் அவதியில் உள்ளவர்கள் நிச்சயமாக யூகலிப்டஸ் எண்ணெயை பயம்படுத்தலாம். இதனை நேரடியாக சருமத்தில் தடவி மசாஜ் செய்யலாம்.
இலவங்கப்பட்டை, முழங்கால்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் அழற்சி எதிர்ப்பு, ஆண்டி-ஆக்சிடெண்டுகள் பண்புகளை கொண்டுள்ளதோடு நீரிழிவு எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு குணங்களைக் கொண்டுள்ளது.
கற்றாழை, அதாவது அலோ வேராவில் அதிக அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. காயங்கள் மற்றும் வீங்கிய மூட்டுகளில் இதை நேரடியாகப் பயன்படுத்தி நிவாரணம் பெறலாம்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.