கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் சில ஆரோக்கியமான உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
அவகேடோவில் ஆரோக்கியமான கொழுப்பு, புரதம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளன. இது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு கெட்ட கொழுப்பை குறைக்கிறது.
உலர்ந்த பழங்கள் மற்றும் விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதங்கள், நார்ச்சத்து மற்றும் சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்சிடெண்டுகள் உள்ளன. அவை கெட்ட கொழுப்பை போக்க உதவுகின்றன.
காய்கறிகளில் கலோரிகள் குறைவாக இருப்பதோடு ஊட்டச்சத்துக்களும் அதிகமாக உள்ளன. பச்சைக் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது கெட்ட கொழுப்பை குறைக்க உதவும்.
நார்ச்சத்துகளுடன், உடலுக்குத் தேவையான பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் உள்ள முழு தானியங்கள் பல வழிகளில் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவும். இது பசியைக் கட்டுப்படுத்தவும், எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
சமையலறையில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் பூண்டு கொலஸ்ட்ராலை நீக்குகிறது. இதில் அலிசின் என்ற கலவை உள்ளது. இது கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
டார்க் சாக்லேட் சாப்பிடுவது கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்கும் என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இது உண்மை. எனினும், இதை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.