இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் காய்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அதிக நார்ச்சத்து உள்ள ப்ரோக்கோலியில் இயற்கையான சர்க்கரை அளவு குறைவாக உள்ளது. இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் குடல் ஆரோக்கியத்திற்கும் உதவும்.
கீரையில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், வைட்டமின் ஏ மற்றும் கே அதிகமாகவும் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ள கத்திரிக்காய் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் மிக உதவியாக இருக்கும்.
நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் கே மற்றும் ஆண்டி ஆக்சிடெண்ட் பண்புகளை கொண்டுள்ள காலிஃபிளவர் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.
குறைவான சர்க்கரை, அதிக சத்துக்கள், குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட முட்டைகோஸ் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவும்.
காளானில் கலோரிகளும் கார்போஹைட்ரேட்ஸும் குறைவாக இருப்பதால் இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகின்றது,
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.