வைட்டமின் B என்பது வைட்டமின் B1 தயமின், வைட்டமின் B2 ரைபோஃப்ளேவின், வைட்டமின் B3 நியாசின், வைட்டமின் B5, வைட்டமின் B6 பைரிடாக்ஸின், வைட்டமின் B7 பயோட்டின், வைட்டமின் B9 ஃபோலேட், வைட்டமின் B12 கோபாலமின் ஆகியவை சேர்ந்து பெறப்படும் உயிர்ச்சத்து.
B12 ஆரோக்கியமான இரத்த அணுக்கள் மற்றும் நரம்புகளை பராமரிப்பதற்கு மிக முக்கியம். உடலில் DNA-வை உருவாக்க உதவுகிறது.
உடலில் வைட்டமின் B12 குறைபாடு ஏற்படும் போது தலைச்சுற்றல், சோர்வு, பலவீனம், மூச்சுத்திணறல், குழப்பம், நினைவுத்திறன் பாதிப்பு போன்றவை இருக்கும்.
இறைச்சி, மீன் உணவுகள், பால், சீஸ், முட்டை ஆகியவை B12 நிறைந்த உணவுகளாகும்.
வைட்டமின் B6 மூளை வளர்ச்சிக்கும் நரம்பு மண்டலங்களின் செயல்பாட்டிற்கும் முக்கியமானது.
வைட்டமின் B9 குறைபாடு நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பதோடு, ரத்த சோகையையும் ஏற்படுத்தும்.
கொண்டைக்கடலை, டுனா மீன், முழு தானியங்கள், கோழி, சால்மன் மீன், வாழைப்பழம் ஆகியவற்றில் விட்டமின் B6 அதிகம் உள்ளது.
வைட்டமின் பி9 குறைபாடு குழப்பத்தையும் மன அழுத்தத்தையும் ரத்த சோகையையும் ஏற்படுத்தும்.
வைட்டமின் பி9 கர்ப்பிணிகளுக்கு அதிகம் தேவை. ஏனெனில் பிறப்பு குறைபாடுகளின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
முழு தானியங்கள், சிட்ரஸ் பழங்கள், பச்சை இலை காய்கறிகள், இறைச்சி, மீன் மற்றும் பீட்ரூட் போன்றவற்றில் வைட்டமின் பி9 அதிகமாக உள்ளது.