தீர்க்காயுசு வாழ உதவும் வைட்டமின்கள்! நூறாயுசு ஆரோக்கியமாக வாழ தேவையான உயிர்ச்சத்துக்கள்!

';

வைட்டமின்கள்

உடலின் உயிர்ச்சத்தாக இருப்பது நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள். அவற்றில் வைட்டமின்களும் மினரல்களும் முக்கியமானவை...

';

நீள் ஆயுள்

ஆரோக்கியத்திற்கு அடிப்படையான உணவில் உள்ள வைட்டமின்களில் சில சரிவிகிதத்தில் இருந்தால், நமது வாழ்நாள் நீளும். மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்வதைவிட உணவின் மூலம் இயற்கையாய் இவற்றை பெறுவது ஆரோக்கியமானது...

';

வைட்டமின் சி

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வைட்டமின் சி, ஃப்ரீ ரேடிக்கல்ஸிடமிருந்து செல்கள் பாதிக்கப்படாமல் பாதுகாப்பதுடன் உடலில் கொலஜன் உற்பத்திக்கும் காரணமாகிறது.

';

வைட்டமின் டி

சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி, நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக செயல்பட அவசியமானது. எலும்பு ஆரோக்கியம், மனநிலை மகிழ்ச்சியாக இருக்க உதவும் வைட்டமின் டி உடலில் குறைந்தால், ஆட்டோ இம்முயூன் கோளாறுகள் ஏற்பட்டு ஆயுள் குறையும்

';

வைட்டமின் இ

ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் மற்றும் வீக்கத்திலிருந்து நமது செல்களை பாதுகாக்கும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் நிறைந்த வைட்டமின் இ, நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதை தடுத்து முதுமையை தள்ளிப்போடுகிறது

';

வைட்டமின் பி12

சிவப்பு ரத்த அனுக்கள் உருவாவதற்கும் டின்ஏ சிந்தெஸிஸ் ஆவதற்கும், நரம்புகளின் செயல்பாடுகளுக்கும் வைட்டமின் பி12 அவசியமானது

';

வைட்டமின் கே2

இதய ஆரோக்கியம், எலும்புகள், ரத்தம் உறைதல் ஆகியவற்றுக்கு வைட்டமின் கே2 அவசியமாகும். வைட்டமின் கே2 உடலில் போதுமான அளவு இல்லாவிட்டால் எலும்புப்புரை மற்றும் இதய நோய் வரும் ஆபத்து கணிசமாக அதிகரிக்கும்

';

பொறுப்புத் துறப்பு

இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story