உடல் பருமன் குறைய... காலை உணவில் ‘இந்த’ உணவுகள் கூடாது!

';

உடல் பருமன்

உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது காலை உணவில் நிச்சயம் தவிர்க்க வேண்டிய உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

';

பேக்கேஜ் தானியங்கள்

காலை உணவுக்காக விற்கப்படும் பேக்கேஜ் தானியங்களில் சர்க்கரை அதிகமாகவும், புரதம் மற்றும் நார்ச்சத்து குறைவாகவும் இருப்பதால், சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே பசி ஏற்படும்.

';

பேஸ்ட்ரி

மஃபின்கள் மற்றும் பேஸ்ட்ரிகளில் சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகம். உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது காலை உணவுக்கு அவை மோசமான தேர்வாகும்.

';

வெள்ளை ரொட்டி

வெள்ளை பிரெட்டில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளது. இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதுடன், சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே பசியை ஏற்படுத்தும்.

';

சாண்ட்விச்

சாண்ட்விச்களில் அதிக கலோரிகள், நிறைவுற்ற கொழுப்பு மற்றும் சோடியம் உள்ளது. எடை இழப்பு உணவுக்கு அவை ஆரோக்கியமான ஆப்ஷன் அல்ல.

';

இறைச்சி

பன்றி இறைச்சி, தொத்திறைச்சி மற்றும் ஹாம் போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் சோடியம், நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகம். எடை இழப்பிற்கு இவை உதவாது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.

';

VIEW ALL

Read Next Story