முதலில், உடல் எடை குறைய ஆரோக்கியமான உணவு, தவறாத உடற்பயிற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
நடைப்பயிற்சி என்பது அனைவராலும் பின்பற்றக்கூடிய மிக எளிமையான அதே நேரம் சிறந்த பலனை கொடுக்கும் பயிற்சி.
வீட்டில் ஸ்கிப்பிங் கயிறு வாங்கி வைத்துக் கொண்டு அதனை தொடர்ந்து பயிற்சி செய்வது உடல் எடையை குறைக்க மிகச்சிறந்த வழி.
அதிக கலோரிகளை எரிக்க உங்களுக்கு பிடித்த இசையை ஓடவிட்டு நடனமாடுதல் மிகச்சிறந்த பலனை தரும்.
வீட்டை பெருக்குதல் சுத்தம் செய்தல் போன்றவற்றை நீங்களாவே செய்வது உடல் எடை இழப்பு முயற்சியில் சிறப்பான பலனை கொடுக்கும்.
புகைப்பிடித்தல் மது அருந்துதல் போன்றவற்றால் உடற்பயிற்சியின் பலனை உங்களால் அடைய முடியாமல் போய்விடும்.
இங்கே குறிப்பிடப்பட்டுள்ள சில எளிய குறிப்புகளை பின்பற்றினாலே, உடல் பருமனை சிறப்பாக குறைக்கலாம்.