உடல் பருமன் குறைய உணவு மற்றும் உடல் பயிற்சிகள் தவிர, உங்கள் வளர்சிதை மாற்றம் முக்கிய பங்கு வகிக்கிறது.
காரமான உணவுகளில் குறிப்பாக மிளகாயில் காணப்படும் கேப்சைசின் என்ற கலவை வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து எடையை குறைக்க உதவுகிறது.
. சிறந்த வளர்சிதை மாற்றத்திற்கு போதுமான அளவு புரத சத்து தேவை. இதற்கு சோயா உணவுகள், முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவை டயட்டில் இருக்க வேண்டும்.
நீங்கள் நாள் முழுவதும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்த அளவு தன்ணீர் குடிப்பது மெட்டபாலிஸத்தை பாதிக்கும்.
உடற்பயிற்சி வளர்ச்சிதை மாற்றம் என்னும் மெட்டபாலிஸத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நல்ல தூக்கத்தைப் பெறுவதும் விரைவான வளர்சிதை மாற்றத்திற்கான வழிகளில் ஒன்றாகும். தினம் குறைந்தது 8 மணிநேரம் தூங்குங்கள்.
இரவு உணவைத் தவிர்ப்பது உங்கள் உடல் பருமனை குறைக்கும் மாற்றும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் உணவுகளை வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை