எல்லா குழந்தைகளுக்கும் ஒரே அளவிலான மூளை வளர்ச்சியும் ஐக்யூ அளவும் இருப்பதில்லை. ஆனால் ஒரு குழந்தை வளரும் போது சில பயற்சிகள் வழங்கினால் அவர்களின் ஐக்யூ நாளடைவில் அதிகரிக்கலாம்.
உடலில் எண்டோர்பின்களை வெளியிடுவதன் மூலம் விளையாட்டு இயல்பாகவே மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. பிடித்த ஒரு விளையாட்டை தினமும் விளையாடுவது ஐக்யூவை அதிகரிக்க செய்யும்.
மூளை வளர்ச்சி சிறப்பாக இருக்க, தயிர், பாதம், வாதுமை பருப்பு, மீன் உணவுகள், போன்ற மூளைக்கான உணவுகள் கொடுப்பது மிக முக்கியம்
தியானம், மூச்சுப் பயிற்சி, தோப்புக்கரணம் போன்றவை மூளையின் செயல் திறனை அதிகரிக்கும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன
குழந்தைகளை கலைகளில் ஈடுபடுத்துவது, பாட்டு, இசைக்கருவி போன்றவற்றை கற்றுக் கொள்வதால் நுணுக்கங்கள் பற்றிய புரிதல் வரும்.
மூளையை உபயோகித்து புதிர்களை தீர்ப்பது, செஸ், சுடோகு போன்ற விளையாட்டுக்களை விளையாட வைப்பது புது விஷயங்களை எப்படி கையாளும் திறன் அதிகரிக்கும்.
குழந்தைகளை இளம் வயதிலிருந்தே கணக்கு பயிற்சிகளை மேற்கொள்ள வைப்பது, அவர்களின் மூளையின் வளர்சி வேகத்தை அதிகப்படுத்தும்.
எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.