அலோ வேரா ஜெல் என்று அழைக்கப்படும் கற்றாழையின் சாற்றில் பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. உடலை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், அழகை மேம்படுத்தவும் இந்த ஜெல் பயன்படுகிறது
கற்றாழையின் ஜெல்லை அப்படியே சாப்பிடலாம், அதை ஜூஸாக மாற்றியும் குடிக்கலாம், எந்த வடிவில் எடுத்தாலும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கற்றாழை நம்பர் ஒன்...
அழகு சார்ந்த பிரச்சனைகளைத் தீர்க்கவும் கற்றாழை ஜெல் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. கற்றாழையில் இருந்து எடுக்கப்படும் ஜெல், பல அழகு சாதன தயாரிப்புகளில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது
ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் உதவும் கற்றாழை, தொங்கும் தொப்பையை அசால்டாக குறைக்கிறது. கற்றாழையின் ஜெல்லில் உள்ள வைட்டமின் ஏ, பி, சி ஈ ஆகியவை உடல் எடையை குறைப்பதுடன் சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது
கற்றாழையில் மலமிளக்கி பண்புகள் உள்ளன, இது செரிமானத்திற்கு உதவும். செரிமான அமைப்பை ஆரோக்கியமாக மேம்படுத்தும் கற்றாழை உடலில் இருந்து கழிவுகளை உகந்த முறையில் வெளியேற்றுகிறது.
கொழுப்பை எரிக்க உதவும் கற்றாழை, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது, இது உடலில் சேமிக்கப்படும் கொழுப்பை ஆற்றலாக மாற்றி எடை குறைக்க உதவுகிறது
கற்றாழை ஜெல்லில் அசிமன்னன் எனப்படும் சிக்கலான கார்போஹைட்ரேட் உள்ளது. இது உடல், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை எளிதாக்குகுவதுடன், உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது.
ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்றாலும், கற்றாழை சாற்றை ஒருவர் அதிகமாக உட்கொள்ளக்கூடாது. அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை