இரத்தத்தில் அதிகரிக்கும் யூரிக் அமிலம் மூட்டுகளில் சேர்ந்து, எலும்புகளுடன் சிறுநீரகத்திற்கும் கேடு விளைவிக்கின்றது.
சில ஆயுர்வேத இலைகளை மெல்வதன் மூலம் யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தலாம்.
கொத்தமல்லியில் அதிக அளவில் ஆண்டிஆக்சிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தி வீக்கத்தை குறைக்கின்றன.
வெற்றிலை யூரிக் அமில அளவை குறைப்பதுடன் கேஸ்ட்ரிக் அல்சரையும் சரி செய்கிறது.
தினமும் 6 துளசி இலைகளை 3 மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டால், யூரிக் அமில அளவும் குறையும், சிறுநீரக செயல்பாடும் சீராகும்.
இரும்புச்சத்து, பொடாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்த புதினா இலைகள் யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
முருங்கை இலை யூரிக் அமில அளவை கட்டுப்படுத்துவதுடன் சிறுநீரகம் மற்றும் சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகின்றன.