மூளையை பாதிக்கும் ‘Zinc’ குறைப்பாடு... அறிகுறிகளும் தீர்வுகளும்!

';

துத்தநாக குறைப்பாடு

துத்தநாக குறைப்பாடு, மூளை பாதிப்பு, மரபணு கோளாறுகள், அசாதாரண வளர்ச்சி, ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே கருவுறுதல் பிரச்சனைகள் போன்ற பலவித நோய்களுக்கு வழிவகுக்கிறது.

';

அறிகுறிகள்

எடை இழப்பு, காயங்களை தாமதமாக குணமடைதல், அடிக்கடி வயிற்றுப்போக்கு, பலவீனமாக உணர்தல், முடி உதிர்தல், சுவை மற்றும் வாசனை உணர்வு இழப்பு ஆகியவை துத்தநாகக் குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகள்

';

பூசணி விதைகள்

ஒரு அவுன்ஸ் பூசணி விதையில் 2.2 மி.கி அளவு துத்தநாக சத்தும் 8.5 மி.கி தாவர அடிப்படையிலான புரதமும் உள்ளது.

';

பயறு

பயறு துத்தநாகத்தின் சிறந்த மற்றொரு மூலம் ஒரு கோப்பை பயறு உணவில், கிட்டத்தட்ட 4.7 மி.கி துத்தநாகம் உள்ளது.

';

முட்டை

முட்டையின் மஞ்சள் கருவில் துத்தநாகம் நிறைந்துள்ளது. இது தவிர வைட்டமின் பி12, தயாமின், வைட்டமின் பி6, ஃபோலேட், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவையும் இதில் காணப்படுகின்றன.

';

பூண்டு

பூண்டில் துத்தநாகம் மட்டுமின்றி வைட்டமின் ஏ, பி மற்றும் சி, கால்சியம், மெக்னீசியம், அயோடின் மற்றும் பொட்டாசியம் ஆகியவை காணப்படுகின்றன.

';

தர்பூசணி விதை

தர்பூசணி விதைகளில் அதிக துத்தநாகம் உள்ளது. தர்பூசணி விதைகளை கழுவி வெயிலில் காயவைத்து உணவில் சேர்த்துக்கொள்ளவும்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story