இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் இந்திய குடியரசு தினம்

Malathi Tamilselvan
Jan 25,2024
';

ஜனவரி 26

இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் வகையில் இந்திய குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது

';

இந்திய குடியரசு தினம்

பள்ளி, கல்லூரிகளில் தேசியக் கொடி ஏற்றி இந்திய குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை வலியுறுத்தும் கலாச்சார நிகழ்வுகள் நாடு முழுவதும் நடத்தப்படுகின்றன

';

தலைநகர்

புதுடெல்லியில் பிரமாண்டமான அணிவகுப்பு நடைபெறுகிறது. அணிவகுப்புக்கு இந்திய குடியரசுத் தலைவர் தலைமை தாங்குவார். பாதுகாப்பு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்படும் இந்த கொண்டாட்டங்களில், இந்தியாவின் இராணுவ வலிமை மற்றும் இந்தியாவின் மாறுபட்ட கலாச்சாரத்தையும் காட்டும் விதமாக அமைந்திருக்கும்

';

விடுதலை போராட்டம்

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்தியா கேட்டில் உள்ள தேசிய போர் நினைவிடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருவதுடடன் அணிவகுப்பு விழா தொடங்கும்.

';

தேசிய போர் நினைவிடம்

உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார். இதையடுத்து பிரதமர் மற்றும் விருந்தினர்கள், கர்தவ்யா பாதையில் உள்ள நிகழ்ச்சி மேடைக்கு செல்வார்கள்

';

குடியரசு தலைவர்

திரெளபதி முர்மூ கர்தவ்ய பாதைக்கு வருகை தருவார். அவரை பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர், முப்படை தளபதிகள் வரவேற்பார்கள்

';

தேசியக் கொடி

பாரம்பரிய முறைப்படி கர்தவ்ய பாதையில் தேசிய கொடி ஏற்றப்படும். அந்த நேரத்தில் 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்படும்

';

விருதுகள்

பரம்வீர் சக்ரா, அசோக் சக்ரா, வீர் சக்ரா என நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் முப்படையினருக்கும் குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்குவார்

';

கேலண்ட்ரி விருதுகள்

விருதுகளை வென்றவர்கள் ராணுவ ஜீப்பில் குடியரசுத் தலைவருக்கு வணக்கம் செலுத்துவார்கள். இதைத் தொடர்ந்து, அணிவகுப்பு ஊர்வலங்கள் நடைபெறும்

';

VIEW ALL

Read Next Story