பாதாமில் வைட்டமின் E அதிகம் உள்ளது, எனவே தொடர்ந்து பாதாம் சாப்பிட்டு வந்தால் வயதான காலத்தில் வரும் விழிப்புள்ளி சிதைவு மற்றும் கண்புரை நோய்கள் வராம பாதுகாத்து கொள்ளலாம்.
முட்டைகளில் லூடெய்ன் மற்றும் ஜீஜெனாதின் குறிப்பிடத்தகுந்த அளவு இருப்பதால், வயதான காலத்தில் ஏற்படும் கண் பிரச்சனைகளிலிருந்து இது நம்மை காக்கிறது.
பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ கேரட்டில் அதிகளவு உள்ளது. இவை இரண்டுமே கண் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கீரைகள், காலே, கோலார்ட்ஸ் போன்ற பச்சை இலை காய்கறிகளில் அதிகளவு லூடெய்ன், ஜீஜெனாதின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இவை அனைத்தும் நம் கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவி செய்கிறது.
சால்மன் மீன் உங்கள் கண் ஆரோக்கியம் பலப்படும். மீனில் அதிகளவு ஓமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. இது கண் பார்வைக்கு சிறந்ததாகும்.
சர்கரை வள்ளிக்கிழங்கிலும் பீட்டா கரோட்டீன் அதிகளவு உள்ளது. இந்த பீட்ட கரோட்டீன் நமது உடலில் உள்ள வைட்டமின் ஏ-யை செயல்பட தூண்டுகிறது. இது நமது கண் ஆரோக்கியத்திற்கும் ஒட்டுமொத்த கண் செயல்பாட்டிற்கும் முக்கியமானதாகும்.
எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது, இது கண் ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் கிளைக்கோமா அபாயத்தைக் குறைக்கிறது.
பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் பிற உலர் பழங்கள் போன்ற நட்ஸ்களில் வைட்டமின் ஈ மற்றும் சி, துத்தநாகம், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. கண்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கும் மூலமாக இது செயல்படுகிறது.
பருப்பு வகைகள் துத்தநாகம் மற்றும் புரதத்தின் சிறந்த மூலமாக செயல்படுகிறது. இயற்கையாகவே கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பருப்பு வகைகள் பெரிதளவில் பயன்படுகிறது.
கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான பழங்களில் ஒன்று கிவி. இது புற ஊதா கதிர்களுக்கு எதிராக கண்களை பாதுகாக்க உதவுகிறது மற்றும் கண்களுக்கு இனிமையான விளைவைக் கொண்டுள்ளது.