காரசாரமான பச்சை மிளகாயின் அற்புத நன்மைகள்

';

நீரிழிவு நோய்

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க பச்சை மிளகாய் உதவிடும். எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

';

நோய் எதிர்ப்பு சக்தி

பச்சை மிளகாயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் இயற்கையாகவே உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

';

கலோரிகள் அற்றது

பச்சை மிளகாயில் கலோரிகளே கிடையாது. அதனால் உடல் எடையை குறைக்க நீங்கள் டையட்டில் இருக்கும் போது இதனை பயன்படுத்தலாம்.

';

ஆண்களுக்கு சிறந்தது

ஆண்கள் பச்சை மிளகாய் உண்ணுவதால் புரோஸ்டேட் புற்றுநோய் பிரச்சனைகள் வராமல் இருக்கும் என அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகிறது.

';

உணவு செரிமானம்

பச்சை மிளகாயில் எண்ணிலடங்கா நார்ச்சத்துக்கள் உள்ளது. எனவே பச்சை மிளகாய் உட்கொண்டால், உணவு செரிமானம் வேகமாக நடைபெறும்.

';

இரும்புச்சத்து

இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு மிளகாய் ஆரோக்கியமானதாகும். பச்சை மிளகாயில் இயற்கையாகவே இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

';

சளி நீங்கும்

பச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின் சவ்வுகள் வழியாக ரத்தம் பாய தூண்டுகிறது .இதனால் சளி சுரப்பது குறைகிறது. இதன் மூலம் சளி போன்ற தொற்றுகளிலிருந்து நம்மை காப்பாற்றி நமக்கு நன்மை அளிக்கிறது.

';

ஆன்டி-பாக்டீரியா பண்பு

பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளது. இந்த குணத்தினால் சரும தொற்றுக்கள் ஏற்படாமல் காக்கிறது.

';

புற்றுநோய்

பச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின் புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடும் திறன் பெற்றது.

';

அல்சர் வராமல் இருக்கும்

பச்சை மிளகாயை அடிக்கடி சாப்பிடுவதால், அல்சர் வராமல் தடுக்கப்படுகிறது. வயிற்றுப்புண் இருப்பவர்கள் பச்சை மிளகாய் சாப்பிடுவதை தவிர்ப்பது மிக நல்லது.

';

VIEW ALL

Read Next Story