ஆண்கள் டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்க 5 இயற்கையான வழிகள்..!

S.Karthikeyan
Mar 24,2024
';


டெஸ்டோஸ்டிரோன் ஒரு பாலியல் ஹார்மோன் மட்டுமல்ல - குறிப்பாக ஆண்களுக்கு, தசை பராமரிப்பு முதல் இரத்த அணுக்கள் உற்பத்தி வரை உடல் முழுவதும் உள்ள அமைப்புகளில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

';


40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு மிகவும் குறைவாக இருக்கும்போது, குறைபாடு மனச்சோர்வு, சோர்வு, குறைந்த ஆண்மை, விறைப்புத்தன்மை மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஆரோக்கிய விளைவுகளை ஏற்படுத்தும்.

';


இதனால் பல உடல் சார்ந்த பிரச்சனைகளை சந்திப்பதுடன் துணையுடனான உறவு சுமூகமாக இருக்காது. திருப்தியின்மை ஏற்பட்டு இருவருக்கும் இடையே விரிசல் கூட ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

';


அத்தகைய பிரச்சனைகள் ஏதும் உஙளுக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் என்றால் இயற்கையான வழிகளில் டெஸ்டோஸ்டிரோனை அதிகரிப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

';

1. தினமும் உடற்பயிற்சி

டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்க தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சீரான உடற்பயிற்சி தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.

';

2. எடை அதிகரிக்க கூடாது

உடல் பருமன் உள்ள ஆண்களில் 50% முதல் 80% வரை டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ளது. கொழுப்பு செல்கள் உண்மையில் டெஸ்டோஸ்டிரோனை ஈஸ்ட்ரோஜனாக மாற்றுவது இதற்கு ஒரு காரணம். உடல் எடையை உயரத்துக்கு ஏற்ப சரியாக இருக்க வேண்டும்.

';

3. துத்தநாகம் மற்றும் வைட்டமின் டி

வைட்டமின் டி மற்றும் துத்தநாக (Zinc) சப்ளிமெண்ட்ஸ் டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கும். டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியில் இரண்டு ஊட்டச்சத்துக்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

';

4. தூக்கத்திற்கு முன்னுரிமை

தூக்கம் சரியாக இல்லை என்றால் டெஸ்டோஸ்டிரோன் உட்பட உடலில் உள்ள ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு ஏற்படும். போதுமான தூக்கம் இருப்பதை உறுதி செய்யவும்.

';

5. மன அழுத்தத்தை குறைக்கவும்

மன அழுத்தம் இருந்தாலும் டெஸ்டோஸ்டிரோன் பிரச்சனை ஏற்படும். இதனால் மன அழுத்தம் இல்லாமல் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

';

VIEW ALL

Read Next Story