மன அழுத்தத்திற்கான மிக முக்கிய அறிகுறிகள்..!

S.Karthikeyan
Nov 23,2024
';


உங்களுக்கு மன அழுத்தம் உள்ளது என்பதை ஒரு சில நடவடிக்கைகளை வைத்து தெளிவாக தெரிந்து கொள்ளலாம்

';

அடிக்கடி கோபம்

மன அழுத்ததில் இருக்கும்போது அடிக்கடி கோபம் வரும். சின்ன சின்ன விஷயங்களில் எல்லாம் முழு கோபத்தையும் காட்டுவீர்கள். எந்தவொரு விஷயத்துக்கும் கோபமே உங்களின் பிரதமான ரியாக்ஷனாக இருக்கும்.

';

பொறுமை

பொறுமை எந்த விஷயத்திலும் இருக்கவே இருக்காது. நிதானத்துடன் எந்த விஷயத்தையும் அணுகவே மாட்டீர்கள். நடக்கட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்ற குணம் இருக்காது

';

பதட்டம்

எந்த விஷயத்தை எடுத்தாலும் உங்களுக்குள் ஒரு பதட்டம் இருந்து கொண்டே இருக்கும். நாம் எப்படி செய்யப்போகிறோம்? என்ற கேள்வி மட்டுமே உங்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும். மனக்குழப்பமும் அதிகமாக இருக்கும். திட்டமிடல், செயல் இல்லாமை இருக்கும்

';

தைரியம் இல்லாமை

எந்தவொருசூழலையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் இருக்காது. உங்களால் தைரியமாக எதிர்கொள்ள முடியாது என்பதால் அந்த இடத்தைவிட்டு சென்று விடுவீர்கள் அல்லது செல்லவே மாட்டீர்கள்

';

இயலாமை

உங்களுக்கு இயலாமை இருந்து கொண்டே இருக்கும். என்னால் செய்ய முடியாது என்ற எதிர்மறை எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். வெற்றியோ தோல்வியோ முயற்சித்து பார்க்கலாம் என்ற எண்ணம் வரவே வராது. தன்னம்பிக்கை சுத்தமாக இருக்காது

';

குற்றச்சாட்டு

எந்த விஷயம் நடந்தாலும் அது பிறரால் உங்களுக்கு நடந்தது போன்றும், அவர்கள் வேண்டுமென்றே உங்களை தோற்கடித்து விட்டார்கள் என்ற எண்ணம் இருக்கும். பிறர் மீதான குறைகளை மட்டுமே பெரிதுபடுத்திக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் முயற்சி செய்யவில்லை என்ற எண்ணம் மேலோங்காது.

';

என்ன செய்ய வேண்டும்?

இன்றைய நாளை ஜீரோவில் இருந்து தொடங்கவும். பழைய விஷயங்கள் எதுவாக இருந்தாலும் மறக்கவும். பிறர் மீது குற்றம் கண்டுபிடிக்காமல், உங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்து செயல்பாட்டை தொடங்கவும். அந்த செயலை வெற்றி பெறும் வரை தொடர்வேன் உறுதி பூண்டு தினசரி பயிற்சி எடுக்கவும்.

';

தியானம்

தியானம், உடற்பயிற்சி, வழிபாடு, பயணம் ஆகியவற்றை மேற்கொள்ளுங்கள். உங்கள் இலக்கில் இருந்து கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தேவை, தேவையில்லாதவை என தரம்பிரித்து, தேவையான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். மன அழுத்தம் நீங்களி, வெற்றி, மகிழ்ச்சி எல்லாம் உங்களை அரவணைக்கும்.

';

VIEW ALL

Read Next Story