திடீரென்று தலைவலி ஏற்பட்டால் துளசி இலை மற்றும் இஞ்சியை மிக்ஸியில் அரைத்து அதன் சாற்றை நெற்றியில் தடவும்.
அடிக்கடி தலைவலி பிரச்சினை ஏற்பட்டால் புதினா இலைகளை மிக்ஸியில் அரைத்து அதன் சாற்றை நெற்றியில் தடவுவவும்.
தலைவலி ஏற்பட்டால் ஆப்பிளை நறுக்கி அதனுடன் சிறிது உப்பு சேர்த்து சாப்பிடலாம். இது வலியை குறைக்க உதவும்.
கிராம்பு உணவின் சுவையை மேம்படுத்துவதோடு தலைவலியை போக்கவும் உதவுகிறது. இதற்கு மூன்று கிராம்புகளை நன்கு சூடாக்கி அவற்றை ஒரு கர்சிபில் கட்டி பின்னர் அதை ஆவி பிடிக்கவும்.
உங்களுக்கு தலைவலி பிரச்சினை இருந்தால் மூன்று பாதாம் பருப்பை தினமும் வென்று சாப்பிட்டு வரவும்.
தலைவலி ஏற்பட்டால், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை கலந்து குடிக்கவும். இதனால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்
ஹேங்ஓவர் காரணமாக தலைவலி ஏற்பட்டால், ஒரு கிளாஸ் தண்ணீரில் ஆப்பிள் வினிகர், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும்.