வெங்காயத்தில் உள்ள கந்தகம் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கவும் உதவும். கொலாஜன் ஆரோக்கியமான தோல் செல்களின் உற்பத்தி மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது. எ
வெங்காயத்தில் சல்பர் இருப்பதால், முடி உதிர்தல் மற்றும் உடைவது குறையும்.
நம் உடல் இயற்கையாகவே ஹைட்ரஜன் பெரக்சைடு எனும் மூலக்கூறுகளைச் சுரக்கும் தன்மைகொண்டது. இது அதிக அளவில் சுரக்கும்போது நரை முடி உருவாகும். இந்தச் சுரப்பை குறைத்து, முடி கருமையாக வளர வெங்காயச் சாற்றைத் தலையில் தடவலாம்.
சிவப்பு வெங்காய எண்ணெய் உச்சந்தலையில் பிஹெச் அளவை பராமரிக்க உதவுகிறது.
ஷாம்பு செய்யும் முன் வெங்காய சாற்றை பயன்படுத்தினால் உச்சந்தலையில் தொற்றை ஏற்படாமல் தடுக்க உதவும்.
வெங்காய சாறு கூந்தலுக்கு இயற்கை கண்டிஷனராக செயல்படுகிறது
சேதம் அடைந்த முடியின் வேர்களை சரி செய்யவும் முடி உடைவதை குறைக்கவும் உதவுகிறது.