ஓக்மரக் காளான்களில் வைட்டமின் பி12 ஒரு சுவையான உணவாககும். வைட்டமின் பி 12 இன் தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்ய நீங்கள் சுமார் 50 கிராம் உலர்ந்த ஓக்மரக் காளான்களை உட்கொள்ள வேண்டும்.
தயிரில், அதிகளவு வைட்டமின் பி 12 அல்லது சயனோகோபாலமைன் உள்ளது. ஒரு கப் சாதாரண தயிரில், 28 சதவீதம் அளவிற்கு வைட்டமின் B12 உள்ளது.
நோரி வைட்டமின் பி12 இன் நல்ல மூலமாகும். 4 கிராம் உலர் நோரியை உட்கொள்வது வைட்டமின் பி12 உட்கொள்ளலுக்கான தினசரி தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்
சைவ உணவை பிரதானமாக எடுத்துக் கொள்கிறவர்கள் போதிய அளவு வைட்டமின் பி12 ஊட்டச்சத்தைப் பெறுவதற்கு செறிவூட்டப்பட்ட தானியங்களை எடுத்துக் கொள்வது நல்லது.
பால் பொருள்களான பால். யோகர்ட், சீஸ் உள்ளிட்டவற்றில் வைட்டமின் பி12 மிக அதிகமாக இருக்கின்றது.
நீங்கள் வெஜிடேரியன் டயட்டை பின்பற்றுபவராக இருந்தால் உங்களுக்குப் போதிய அளவு வைட்டமின் பி12 கிடைப்பதற்கு நிறைய காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு வேகவைத்த முட்டையில் இருந்து 0.6 மைக்ரோகிராம் அளவுக்கு வைட்டமின் பிி12 கிடைக்கும். குறிப்பாக முட்டையின் மஞ்சள் கருவில் தான் வைட்டமின் பி12 இருக்கிறது என்பதால் முட்டையை மஞ்சள் கருவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.