மழை நேரத்தில் காய்கறிகளின் விலை அதிகளவில் இருக்கும். அதே சமயம் அதனை கெட்டுப்போகாமல் பாதுகாப்பதும் சிரமம்.
எனவே அவற்றை சந்தையில் வாங்கி கெட்டுப்போகாமல் சேமித்து வைப்பதே பெரிய வேலையாக இருக்கும்.
மழையின் போது காய்கறிகளில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
சந்தையில் இருந்து காய்கறிகளை வாங்கியவுடன் அவற்றை நன்கு கழுவி உலர்ந்த துணியை பயன்படுத்தி சுற்றி வைக்கவும்.
முடிந்தவரை இலைக் காய்கறிகளை மழைக்காலத்தில் வாங்கி சமைப்பதை தவிர்ப்பது நல்லது.
வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை தனி தனியாக காற்றோட்டமான இடத்தில் வைக்கவும்.
கேரட் மற்றும் பீட்ரூட் போன்றவற்றை பிளாஸ்டிக் அல்லது ஜிப்லாக் பையில் சேமித்து வைக்கலாம்.
பச்சை மிளகாய், வெள்ளரி, வெண்டைக்காய் போன்றவற்றை துணி பைகளில் சேமித்து வைக்கலாம்.
பட்டாணி மற்றும் கட் சாலட்களை புதியதாக வைத்திருக்க காற்று புகாத டப்பாக்களில் வைக்கலாம்.