தேர்தலில் வாக்களிக்க தேவையான முக்கிய ஆவணங்கள்!

';


மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க அடையாளச் சான்றாக 12 வகையான ஆவணங்களை தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ளது.

';


இந்த ஆவணங்களின் அசல் பிரதியை எடுத்துச் சென்று வாக்காளர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்தலாம்.

';


புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், வாகன ஓட்டுநர் உரிமம்.

';


மத்திய-மாநில அரசுகள்-பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கியுள்ள அடையாள அட்டைகள்.

';


வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் வழங்கியுள்ள புகைப்படம் ஒட்டப்பட்ட சேமிப்புக் கணக்குப் புத்தகம்

';


வருமான வரிக் கணக்கு அட்டை (பான் கார்டு), ஆதார் அடையாள அட்டை. தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய ஸ்மார்ட் அட்டை.

';


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அடையாள அட்டை. மத்திய தொழிலாளர் நலத் துறை வழங்கியுள்ள சுகாதார காப்பீட்டு திட்டத்துக்கான ஸ்மார்ட் கார்டு.

';


புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், தேர்தல் ஆணையத்தின் சார்பில் வழங்கப்படும் வாக்குச்சாவடி சீட்டு.

';

VIEW ALL

Read Next Story