தேங்காயை உடைக்காமல் தேங்காய் தண்ணீரை வெளியே எடுப்பது எப்படி?
தேங்காயை உடைக்காமல் அதில் இருக்கும் தண்ணீரை எப்படி எடுப்பது என யோசிக்கிறீர்களா?
ஈஸியாக தேங்காயை உடைக்காமல் தண்ணீரை வெளியே எடுத்து குடிக்கலாம்.
நல்ல தரமான தேங்காயை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் குடுமி பகுதியை அகற்றுங்கள்
அப்போது, மூன்று நான்கு புள்ளிகள் போல் இருக்கும் இடத்தை நீங்கள் கவனியுங்கள்
இப்போது ஏதேனும் ஒரு புள்ளியை தேர்வு செய்து அதில் வீட்டில் இருக்கும் சிணுக்கோலி (மைகோதி)-யை கொண்டு துளையிடவும்
பின்னர் தேங்காய் தண்ணீரை அந்த துளை வழியே நீங்கள் எடுத்து குடிக்கலாம்
தேங்காயை உடைக்காமல் தண்ணீரை குடிக்க விரும்புவர்கள் இந்த டிரிக்ஸை பின்பற்றலாம்.