பணத்தை ஈட்டுவது போலவே பணத்தை சேமிப்பதும் மிக அவசியமாகும். பிபிஎஃப் பணத்தை சேமிப்பதற்கான ஒரு பாதுகாப்பான அரசாங்க திட்டமாக பார்க்கப்படுகின்றது
பிபிஎஃப் -இல் அதிக வட்டியும் கிடைக்கின்றது. ரூ.500 -க்கான பிபிஎஃப் கணக்கை (PPF Account) திறந்து வரி விலக்கும் பெற முடியும்.
PPF கணக்கை 15 ஆண்டுகளுக்கு திறக்கலாம், இதை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம். PPF கணக்கில் உள்ள தொகைக்கு தற்போது 7.1% வட்டி கிடைக்கின்றது.
தபால் நிலையம் அல்லது ஏதாவது ஒரு வங்கியில் எளிதாக PPF கணக்கை திறக்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் PPF கணக்கில் குறைந்தபட்சமாக ரூ.500 மற்றும் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் டெபாசிட் செய்யலாம்.
மாதம் ரூ.9000 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் ரூ.29.29 லட்சம் கிடைக்கும். 20 ஆண்டுகளில் ரூ.47.94 லட்சம் கிடைக்கும்.
25 ஆண்டுகளில் 74.21 லட்சம் ரூபாய் கிடைக்கும். 30 ஆண்டுகளில் ரூ.1.1 கோடி கார்பசை உருவாக்கலாம்.
இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.