கண் பார்வை குறைப்பாட்டை தடுக்க நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்..!
வெயில் காலம் முடிந்தது கண்களுக்கு ஒரு நன்மையாக இருந்தாலும், மழைக்காலத்திலும் அதனை பாதுகாப்பது அவசியம்.
மழைக்காலத்திலும் சூரிய ஒளியால் கண்கள் கூசுவதை போன்று உணர்ந்தால் கண்ணாடி போட்டுக் கொள்ளுங்கள்
கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அதில் இருந்து பரவும் தொற்றுகள் நேரடியாகவே கண்களை பாதிக்க வாய்ப்பு இருக்கிறது
பாக்டீரியா, வைரஸ் தொற்றுகள் அதிகம் மழைக்காலத்தில் பரவும். காற்று வழியாகவும் தொற்றுகள் பரவும். அவை கண்களை பாதிக்கும்.
அதனால் கண்களுக்கு தேவையான Eye Drop எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள். கண் எரிச்சல் அல்லது தூசியால் பாதிப்பு ஏற்பட்டால் அதனை பயன்படுத்தவும்
வெறும் கைகளால் அடிக்கடி கண்களை போட்டு கசக்காதீர்கள். அதுவே கண் பாதிப்புக்கு அடிப்படையான காரணமாக அமைந்துவிடும்
நோய் எதிர்ப்பு சக்தி மிக்க உணவுகளை சாப்பிடுங்கள், உடலுக்கு போதுமான தண்ணீர் குடித்து நீரேற்றமாக வைத்துக் கொள்ளுங்கள்
வாகனங்களில் வெளியில் செல்லும்போது சாதாரண கண்ணாடி ஒன்றையாவது வாங்கி அணிந்து கொள்ளுங்கள்
வாகனங்களில் வெளியில் செல்லும்போது சாதாரண கண்ணாடி ஒன்றையாவது வாங்கி அணிந்து கொள்ளுங்கள்
ஏதேனும் அசௌகரியமாக நீங்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.