தவறான நட்பு என்பது உண்மையாக இல்லாமல் போலியாக இருப்பது.
ஒரு நல்ல நட்பில் தவறான வார்த்தைகள் ஒருபோதும் இருக்காது. அப்படிப்பட்ட நட்பில் தவறான பேச்சு ஏதேனும் இருந்தால் நிச்சயம் தீய நட்பாக இருக்கலாம்.
உங்களை மற்றவர்களிடம் தரம் குறைத்துப் பேசும் நண்பர்கள் நிச்சயம் நல்ல நண்பர்கள் இல்லை.
முகம் அழகு, உடை அழகு அல்லது ஏதேனும் ஒரு அழகை வைத்துக் கிண்டல் அடித்துப் பேசுபவர்கள் உண்மையான நட்பாக மாட்டார்கள்.
உண்மையான நண்பர்கள் தினமும் நல்ல பேச்சு வார்த்தை வைத்துக் கொள்வார்கள்.
நீங்கள் ஏதேனும் ஒன்றில் வெற்றி அடைந்தால் அதில் சந்தோஷம் காணாமல் பொறாமை காணும் நண்பர்கள் உண்மை நண்பர்கள் இல்லை.
மற்றவர்கள் முன் தரம் தாழ்த்தி அவமதித்துப் பேசும் நண்பர்களிடம் குறைவான பேச்சை வைத்துக் கொள்ளவும்.