குளிர்காலங்களில் தொண்டை புண் அல்லது தொண்டை வலி கஷ்டத்தை கொடுக்கும்.
இதனால் கரகரப்பு, வலி, வீக்கம் மற்றும் தண்ணீர் குடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ஆயுர்வேதம் தொண்டை வலி எளிதான தீவுகளை தருகிறது.
வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு கலந்து இரண்டு முறையாவது வாய் கொப்பளிக்கவும்.
மஞ்சளின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.
துளசி மற்றும் மஞ்சள் தொண்டை புண்களுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
துளசி இலை மற்றும் மஞ்சளை தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்தால் தொண்டை வலி சரியாகும்.
வாய் கொப்பளிக்க விரும்பாதவர்கள், எப்போது சுடு தண்ணீரை குடித்து பழகுங்கள்.
வெதுவெதுப்பான நீர், உங்கள் தொண்டையை மென்மையாக்குகிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
காய்ச்சல், இருமல் மற்றும் சளி காலம் வரும்போது வெதுவெதுப்பான நீரை குடிப்பதன் மூலம் பயன்பெறலாம்.