மழைக்காலத்தில் வயிறு கெட்டுப்போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

';

மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், தொற்றுநோய், காய்ச்சல், சளி உள்ளிட்ட பிரச்சனைகள் வரிசையாக வரத் தொடங்கும்.

';

அதனை எதிர்க்கொள்ள முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

';

இல்லையென்றால் வயிறு கெட்டுப்போய், செரிமான பிரச்சனைகள் ஏற்பட்டு பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும்.

';

இதனை தடுக்க மழைக்காலத்தில் என்ன செய்ய வேண்டும்?, முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்வோம்.

';

எந்தவொரு உணவை சாப்பிடுவதற்கு முன்பு கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவிட்டு சாப்பிடுங்கள்

';

பிரெஷ்ஷாக இருக்கும் காய்கறிகளை வாங்கவும். ஏற்கனவே கட் செய்து வைத்திருக்கும் காய்கறி பழங்களை வாங்காதீர்கள்

';

வாங்கி வரும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் வைக்கவும்

';

காய்கறிகளை சமைக்கும் முன் சுத்தமாக கழுவவும். அழுகியிருந்தால் அந்த பகுதியை வெட்டி வீசிவிடவும்.

';

எந்த உணவாக இருந்தாலும், குறிப்பாக இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவுகள் நன்கு வேக வைத்து சாப்பிடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்

';

உடலுக்கு தேவையான தண்ணீர் குடிப்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். சாலையோர உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.

';

VIEW ALL

Read Next Story