பிறந்த குழந்தைக்கு பசும்பால் கொடுக்கலாமா?

S.Karthikeyan
Jan 05,2025
';


பசும்பால் கொடுக்கப்படும் ஒரு வயதுக்கு கீழுள்ள குழந்தைகளில் 7 சதவிகிதத்தினருக்கு அலர்ஜி ஏற்படுகிறது.

';


இதை, பசும்பால் புரத ஒவ்வாமை (Cow Milk Protein Allergy) என்போம். பசும்பால் புரத ஒவ்வாமை ஏற்படும் குழந்தைகளில், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும்

';


குடல்வலியால் தொடர்ந்து அழுதல் (colic), சரும அரிப்பு, உதடு, முகம் மற்றும் கண்களைச் சுற்றி வீக்கம், சளி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

';


பசும்பாலில் காணப்படும் பீட்டா - லேக்டோகுளோபுலின் (Beta- Lactoglobulin) என்னும் புரதம்தான், 76% பசும்பால் ஒவ்வாமை ஏற்படக் காரணமாகும்.

';


இந்த பீட்டா-லேக்டோகுளோபுலின் புரதம் தாய்ப்பாலில் காணப்படுவதில்லை. பசும்பால் புரத ஒவ்வாமை காணப்படும் குழந்தைகளில் ஒரு வயதுக்குப் பிறகு 50% பேருக்கு குணமாகும்.

';


5 வயதுக்குள் 80 - 90% பேருக்கும் அந்த ஒவ்வாமை முற்றிலும் குணமாகிவிடுகிறது.

';


எனவேதான், குழந்தைகளுக்கு ஒரு வயதான பிறகு, பசும்பால் கொடுக்கத் தொடங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

';

VIEW ALL

Read Next Story