கால்சியம், மெக்னீசியம், இரும்பு, நார்ச்சத்து, துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்துள்ள கசகசா பல நோய்களை தடுக்கும் ஆற்றல் கொண்டது.
கசகசா நரம்பு தளர்ச்சியை போக்கும். ஏனெனில், மூளைக்குச் செல்லும் நரம்புகள் மற்றும் ரத்த செல்களை தூண்டு ஆற்றல் கசகசாவிற்கு உண்டு.
கால்சியம் மற்றும் தாமிர சத்து நிறைந்துள்ள கசகசா எலும்புகளை மட்டுமல்லாது எலும்புகளுக்கு இடையில் உள்ள திசுக்களையும் வலுப்படுத்தும்.
LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், HDL என்னும் நல்ல கொலஸ்டிராலை அதிகரிக்கவும் கசகசா உதவுகிறது.
மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தையும், பதட்டத்தை குறைக்க உதவும் கசகசா, தூக்கமின்மைக்கு மருந்தாகும்.
கசகசாவை உட்கொள்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
கசகசாவில் உள்ள ஜிங்க் சத்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது