கனவு காணுங்கள்..! ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல உன்னை தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ அதுவே (இலட்சியம்) கனவு..
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை.. நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால்.. நீ எண்ணியது உன்னை வந்து சேரும்.. நீ நீயாக இரு..!
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்.. ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்..!
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவது இல்லை
இமயத்தின் உச்சியை எட்டித் தொடுவதாயினும் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை அடைவதாயினும் சரி, மேலே ஏறிச் செல்ல ஒருவருக்கு மிக்க மனவுறுதி தேவைப்படுகிறது.
வெற்றி உன்னிடம்..! கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே.. அது உன்னை கொன்றுவிடும்.. கண்ணை திறந்து பார் நீ அதை வென்று விடலாம்..!
அழகை பற்றி கனவு காணாதீர்கள் அது உங்கள் கடமையை பாழாகி விடும்.. கடமையை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.