ஓவர் எடையை உடனே குறைக்கும் டிப்ஸ்: கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க

Sripriya Sambathkumar
Mar 25,2024
';

எடை இழப்பு

எடை இழப்பு இந்த நாட்களில் மக்களை பாடாய் படுத்தும் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக மாறி வருகின்றது. இதனால் பல வித உடல் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன

';

உடல் எடையை குறைக்க

உடல் எடையை குறைக்க வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

தண்ணீர்

நாள் முழுவதும் போதுமான அளவு நீரை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக வெதுவெதுப்பான நீரை உட்கொள்வது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து கலோரிகளை எளிதாக எரிக்க உதவுகிறது.

';

சமச்சீர் உணவு

புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து ஆகிவை அடங்கிய சமச்சீரான உணவை உட்கொள்வதால் உடலில் கொழுப்பு சேர்வது தவிர்க்கப்பட்டு செரிமானம் சீராகி வளர்ச்சி மாற்றம் மேன்மை அடையும்.

';

உடற்பயிற்சி

நமது வாழ்க்கை முறை எவ்வளவு பிஸியாக இருந்தாலும் யோகா, உடற்பயிற்சிகள், ஓட்டப்பயிற்சி , நடைப்பயிற்சி ஆகியவற்றில் ஏதாவது ஒரு பயிற்சியை தினமும் கண்டிப்பாக செய்ய வேண்டும்.

';

உறக்கம்

உறக்கம் குறையும்போது மன அழுத்தம் அதிகரிக்கிறது. மன அழுத்தம் அதிகரித்தால் உடலில் கார்டிசோல் ஹார்மோன்கள் அதிகரிக்கின்றன. இது உடல் எடை அதிகரிக்க காரணமாகின்றது.

';

சரியான இரவு உணவு

இரவு உணவில் லேசான உணவுகளையும், ஜீரணிக்க எளிதான உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.தூங்குவதற்கு 3-4 மணி நேரத்திற்கு முன்னர் இரவு உணவை உட்கொள்வது மிக அவசியமாகும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story