குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் முடிந்த அளவுக்கு இரசாயனம் இல்லாதவற்றைக் கொடுக்கவும்.
குழந்தைகள் சாப்பிடும் நேரத்தில் மற்றும் பெற்றோர்கள் வேலை செய்யும் நேரத்தில் செல்போன் கொடுத்துப் பழகுவதைத் தவிர்க்கவும்.
குழந்தைகளைப் பெற்றோர்கள் உன்னிப்பாகப் பார்த்துக்கொள்ளும் நேரம் இது. அவர்களுடன் அன்பான நேரம் செலவிடுங்கள்.
குழந்தைகளுக்கு பாக்கெட் உணவுகளை வாங்கிக் கொடுப்பதைத் தவிர்க்கவும். மாறாக வீட்டில் சமைத்துக் கொடுக்கவும்.
குழந்தைகளுக்கு உணர்ச்சி ரீதியான தலைப்பு சொற்களைச் சிறு வயதில் திணிக்க வேண்டாம்.
குழந்தைகளுக்கு எது நல்ல விஷயம் மற்றும் எது கெட்ட விஷயம் என்று அழகாகப் புரியும்படி கூறுங்கள்.