காதல் உறவோ, திருமண உறவோ அதனை பிரச்னையில்லாமல் நிம்மதியாக வைத்திருப்பது தற்போது மிகவும் கடினமாகி உள்ளது.
அன்பு, மகிழ்ச்சி, நம்பிக்கை போன்றவை உறவுக்கு மிகவும் முக்கியமானது, அதேபோல் வெளிப்படைத்தன்மையும் மிக மிக முக்கியம்.
எனவே, பின்வரும் இந்தெந்த விஷயங்களை உங்களின் துணையிடம் மறைக்கவே மறைக்காதீர்கள்.
உங்களின் கணவரிடமோ/மனைவியிடமோ உங்களின் கடந்த கால உறவுகள் குறித்து மறைக்காதீர்கள்.
உங்கள் குறித்தும், உங்களின் இயல்பு குறித்தும் மறைக்காமல் வெளிப்படையாக உங்களின் துணையிடம் கூறுங்கள்.
உங்களின் மனதில் தோன்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த தயங்காதீர்கள். குறிப்பாக, சண்டையின்போது உணர்ச்சிகளை மறைப்பது தவறாக போய் முடியும்.
ஒரு குடும்பத்தை நீங்கள் நடத்துகிறீர்கள் என்றால் அதில் அனைவருக்கும், அனைத்தும் தெரிந்திருப்பது அவசியம். ஒளிவுமறைவு கூடவே கூடாது.