மோசமான தூக்கத்தால் ஏற்படும் மிகப்பெரிய சிக்கல்..!
மோசமான தூக்கத்தின் தரம், தூங்குவதில் சிரமம் மற்றும் சீக்கிரம் எழுந்திருப்பது உள்ளிட்டவை தூக்க சிக்கல்களின் அறிகுறி.
இதனால் பல ஆரோக்கிய சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும் என அண்மையில் வெளியான ஆய்வு தெரிவித்துள்ளது
நடுத்தர வயதினரின் ஆரம்பகால மோசமான தூக்கம், பிற்கால வாழ்க்கையில் மூளை வேகமாக முதிர்ச்சியடைய வாய்ப்புள்ளது
மோசமான தூக்கத்திற்கும், மூளை ஆரோக்கியத்தில் ஏற்படும் அதிக சரிவுக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு இருக்கிறது
தூக்கப் பிரச்சனைகளை நினைவாற்றல் மற்றும் சிந்தனைத் திறன்களை பாதிக்கும். டிமென்ஷியா அபாயத்தையும் அதிகரிக்கிறது.
தூக்க பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே நிவர்த்தி செய்வது மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும்
உடற்பயிற்சி செய்தல் மற்றும் ஓய்வெடுத்தல் மிக அவசியம். இல்லையென்றால் மன அழுத்தம் அதிகரிக்கும்.
நாட்பட்ட நோய்களுக்கும் தூக்க பிரச்சனைகள் வழிவகுத்து மருந்து மாத்திரைகளோடு வாழும் நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள். உஷார்..!