2023ல் அதிகம் தேடப்பட்ட உணவுகளின் பட்டியல்

';

மாங்காய் ஊறுகாய்

மாங்காய் ஊறுகாய் போடுவது எப்படி என்றுதான் இந்தியர்கள் இந்த ஆண்டில் கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.

';

செக்ஸ் ஆன் தி பீச்

இந்த பானம் 1987 ஆம் ஆண்டில் புளோரிடாவில் உள்ள கான்ஃபெட்டிஸ் பாரில் ஒரு மதுக்கடைக்காரரால் உருவாக்கப்பட்டது. மாங்காய் ஊறுகாய்க்கு அடுத்த இடத்தில், காக்டெயில் பானமான செக்ஸ் ஆன் தி பீச் ரெசிபியை அதிகமானோர் தேடியுள்ளனர்.

';

பஞ்சாமிர்தம்

பால், தயிர், நெய், தேன் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பஞ்ச பொருட்களால் ஆனது. இது முதலில் தெய்வங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது, பின்னர் பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. கூகுளில் அதிகம் தேடப்பட்ட ரெசிபி பட்டியலில் 3-வது இடத்தில் இது உள்ளது.

';

ஹகுசாய்

ஜப்பானிய செய்முறையில் முட்டைக்கோஸ், கேரட், கோஷர் உப்பு, சிவப்பு மிளகாய் ஆகியவற்றைக் கொண்டு தயார் செய்யப்படுவது தான் ஹகுசாய்.

';

தனியா பஞ்சிரி

வறுத்த கொத்தமல்லி விதைகள், நட்ஸ் மற்றும் வெல்லம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் தனியா பஞ்சிரி ஒரு பாரம்பரிய இந்திய சூப்பர்ஃபுட் ஆகும்.

';

கரஞ்சி

மஹாராஷ்டிராவில் இருந்து வரும் மிகச்சிறந்த இனிப்பு, தேங்காய் மற்றும் வெல்லம் கலவையால் நிரப்பப்பட்ட சுவை மொட்டுகளுக்கு ஒரு விருந்தாகும்.

';

திருவாதிரை களி

பச்சரிசி ரவை, வெல்லம், நெய், தேய், பாசி பருப்பு ஆகியவை சேர்ந்து இந்த திருவாதிரை களி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட உணவுகளில் திருவாதிரை களி 7-வது இடத்தில் உள்ளது.

';

உகாதி பச்சடி

இந்த உணவு ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் பிரபலமானது. வேப்பம்பூக்கள், பச்சை மாம்பழம், வெல்லம், மிளகுத் தூள், தேங்காய் மற்றும் உப்பு ஆகியவற்றைக் கொண்டு இது தயாரிக்கப்படுகிகிறது.

';

கொழுக்கட்டை

விநாயக சதுர்த்தியில் தயாரிக்கப்படும் கொழுக்கட்டை இந்த ஆண்டின் அதிகம் தேடபப்ட்ட உணவுகளில் 9வது இடத்தில் உள்ளது. தேங்காய், வெல்லம், எள்ளு ஆகியவற்றை பூரணமாக செய்து, அதை பச்சரிசி மாவில் கொழுக்கட்டையாக பிடித்து வேகவைத்து செய்யப்படுகிறது.

';

ரவா லட்டு

ரவை, நெய், சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு எளிய தயாரிப்பாகும். இந்த கலவையை உருண்டையாக பிடித்து லட்டு போல் செய்யப்படுகிறது. கூகுளில் அதிகம் தேடப்பட்ட உணவுகளில் 10-வது இடத்தில் இது உள்ளது.

';

VIEW ALL

Read Next Story