மூட்டு வலி குணமடைய இந்த யோகாசங்களை செய்யவும்

';

தடாசனம்

இந்த ஆசனத்தை செய்ய உங்கள் கால் விரல்கள் மற்றும் குதிகால் தரையில் படும்படி நேராக நிமிர்ந்து நிற்கவும். கைகளை தளர்த்தி ஓய்வு நிலையில் வைக்கவும். இதே நிலையில் 5 முதல் 8 முறை மூச்சை உள்ளெழுத்து வெளியேற்றவும்.

';

ஹஸ்த உத்தனாசனம்

உள்ளிழுத்துக்கொண்டு இரு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி உள்ளங்கைகளை இணைத்து வணக்கம் வைக்கவும். நேராக நிமிர்ந்து நிற்கவும். மூச்சை வெளியே விடும் பொழுது கைகளை கீழ்நோக்கி கொண்டு வந்து சமஸ்திதி நிலையை அடையவும்.

';

மலாசனம்

உங்கள் தோள்பட்டையின் அகலத்திற்கு உங்கள் கால்களை வைத்து நிற்கவும். மெதுவாக பாதி உட்காரும் நிலையில் மூச்சை வெளியேற்றிக் கொண்டு, உங்கள் உடலை விட உங்கள் கால்களை அகலமாக அகற்றி வைக்கவும். உங்கள் கைகளை சேர்த்து வணக்கம் வையுங்கள்.

';

பட்சி மோத்தாசனம்

முதலில் 2 கால்களையும் முன்னால் நீட்டி அமர்ந்து கைகளை பக்கவாட்டில் தரையில் ஊன்றியவாறு வைக்கவும். பின்னர் இரு கைகளையும் பக்கவாட்டில் நீட்டியவாறு மூச்சை உள்ளெழுத்து தலைக்கு மேல் கைகளை உயர்த்தவும். பின்னர் இரு கால்களின் பெரு விரல்களையும் பிடித்துக் கொண்டு முன்புறமாக குனிந்தவாறு உங்களின் நெற்றியால் கால் முட்டியை தொடவும்.

';

தனுராசனம்

முதலில் குப்புற படுத்துக்கொண்டு இரு கால்களையும் தூக்கி கைகளால் அவற்றை பிடித்துக் கொள்ளவும். உங்கள் முழங்கால்களின் அகலம் இடுப்பு பகுதியின் அகலத்தை விட அதிகமாக இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவும். முதுகை வில் போல வளைத்து, மேல் நோக்கி பார்க்கவும்.

';

சித்தா நடை பயிற்சி

எண் 8 வடிவத்தில் தெற்கு முதல் வடக்கு நோக்கி குறைந்தபட்சம் 11 நிமிடங்கள் நடக்க வேண்டும். பின்னர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி மீண்டும் 11 நிமிடங்கள் நடக்க வேண்டும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story