வாழ்க்கையில் வெற்றி பெற விவேகானந்தரின் 10 பொன்மொழிகள்

';

செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு.

';

தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள்.

';

சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.

';

பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

';

வெற்றிகளை சந்தித்தவன் இதயம் பூவை போல் மென்மையானது. தோல்வி மட்டுமே சந்த்தித்தவன் இதயம் இரும்பை விட வலிமையானது.

';

கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

';

நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல், நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தி அற்றது ஆகிவிடும்.

';

இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையெனில் உங்களுக்கும் மரங்கள், கற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

';

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்த பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.

';

நீ உலகுக்கு உதவி செய்ய விரும்பினால் உலகை தூற்றாதே. குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே

';

VIEW ALL

Read Next Story