காலையில் சுடு தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
காலையில் வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிப்பதால் செரிமானம் முதல் சுறுசுறுப்பான நரம்புகள் இயக்கம் வரை ஏராளமான நன்மைகள் உள்ளன.
சுடு தண்ணீர் குடிக்கும்போது மலக்கட்டு இருந்தால் அவற்றை சரி செய்து மலச்சிக்கலை போக்கிவிடும். இதனால் வயிறு உப்புசம் இருக்காது
மலச்சிக்கல் இல்லை என்றால் வாய்வு தொல்லை இருக்காது. இதனால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்
சுடு தண்ணீர் குடிக்கும்போது உணவுகள் உடைந்து செரிமானம் மிக எளிதாக நடக்கும்
சுடு தண்ணீர் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி உடல் பாகங்கள் அனைத்தும் சுறுசுறுப்பாக இருக்க வழிவகை செய்யும்
காலையில் வெதுவெதுப்பான தண்ணீரை குடுக்கும்போது உடல் எடை குறைப்பில் முக்கிய பங்காற்றும். கூடவே ஆரோக்கியமான டையட் எடுத்துக் கொள்ளவும்
வெதுவெதுப்பான தண்ணீர் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன் நரம்புகளை புத்துணர்ச்சியுடன் செயலாற்றவும் தூண்டும்
சுவாச சிக்கலை போக்குவதிலும் வெதுவெதுப்பான நீர் பங்களிக்கிறது. இதனால் நாசியில் இருக்கும் நச்சுகள் வெளியேறும்
வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கும்போது தலை பாரம், மன அழுத்தம்கூட குறைய வாய்ப்பு இருக்கிறது.