நீரிழிவு நோய் கைமீறி சென்றுவிட்டால் என்ன ஆகும்?
நீரிழிவு நோய் மிகவும் ஆபத்தானது என்பதை ஆரம்பத்தில் உணர முடியாது. மோசமான வாழ்க்கை முறையால் தீவிரம் அதிகரிக்கும் நோய்
நீரிழிவு நோய் தென்பட்ட உடனே உணவு முறை, வாழ்க்கை முறை ஆகியவற்றில் கட்டாயம் மாற்றம் கொண்டு வர வேண்டும்
தினசரி மூன்று வேளை சாப்பாடு, தண்ணீர் குடிப்பது என எல்லாவற்றிலும் மிக கவனமாக இருக்க வேண்டும். தூக்கம் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
இரவு அதிக நேரம் விழித்துக் கொண்டிருக்கக்கூடாது. லேட்டாக சாப்பிடக்கூடாது, அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
வாரம் ஒருமுறை கட்டாயம் நீரிழிவு நோய் பரிசோதனை செய்து அதன் அளவுக்கு ஏற்ப மருந்து மாத்திரைகள், இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டும்
இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் உடல் வலி, காலில் காயம் ஏற்படுவது உள்ளிட்ட பிரச்சனைகள் தொடங்கும்
நாளைவில் கால்களை முழுவதுமாக அகற்ற நேரிடும், கால்களில் நீர் வடிந்து கொண்டே இருக்கும். அதனை கட்டுப்படுத்த முடியாது
நிலமையை பொறுத்து டயாலிஸ் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். வாரம் இரண்டு முறை எல்லாம் டயாலிசிஸ் செய்ய வேண்டியிருக்கும்
அதுவும் செய்ய முடியாதளவுக்கு நிலமை மோசமடையும்போது கிட்னி செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் தேதி குறிக்கப்பட்டுவிடும்
எனவே, நீரிழிவு நோயை ஆரம்பத்தில் அசால்டாக எடுத்துக் கொள்ளாமல் உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு ஆரோக்கியமாக இருக்கவும்.