குழந்தைகளை குறைவாக குளிக்க வைக்க வேண்டும் ஏன்?
குழந்தைகள் அழுக்காக இருப்பதுகூட பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால், சில பெற்றோர்கள் கொஞ்சம் அழுக்கு இருந்தால்கூட குழந்தைகளை குளிக்க வைத்துவிடுவார்கள்.
ஆய்வு ஒன்றில், குழந்தைகள் கொஞ்சம் அழுக்காக இருந்தால், அவர்களை குளிக்க வைக்கத் தேவையில்லை என கூறியுள்ளது. அமெரிக்கன் அகாடமி ஆப் டெர்மடாலஜி பரிந்துரை வழங்கியுள்ளது
6 முதல் 11வயது இருக்கும் குழந்தைகள் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளித்தால் போதும் எனக் கூறியுள்ளது. பச்சிளம் குழந்தைகளையும் தண்ணீர் கொண்டு அதிகம் சுத்தம் செய்ய தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஒருவேளை அழுக்காகும் என நினைத்து குழந்தைகள் விளையாடவோ, நடக்கவோ பயந்தால், அவர்களுக்கு குளிப்பாட்டிவிடலாம் எனவும் அந்த அகாடமி கூறியுள்ளது.
வளர்ந்தவர்களுடன் ஒப்பிடும்போது குழந்தைகளின் செயல்பாடு மிகவும் குறைவாக இருக்கும். இதனால், வியர்வை, அழுக்குகள் குறைவாக இருக்கும். பாக்டீரியா போன்ற தொற்றுகளும் அவர்களிடம் சேராது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், குழந்தைகளுக்கு அதிக அழுக்கு சேருவதும் நன்மை என கூறியுள்ள மருத்துவர்கள், அப்போது பாக்டீரியா போன்ற தொற்றுகளுக்கு எதிராக போராடுவதற்கு நோய் எதிர்ப்பு மண்டலம் வளர்ச்சியடையும் என விளக்கம் அளித்துள்ளனர்.
சேறு மற்றும் சகதிகளில் விளையாட அவர்களை அனுமதிக்கலாம், அதேநேரத்தில் அதில் இருந்து வெளியே வந்தவுடன் நன்றாக குளிக்க வைக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.