தமிழ் திரையுலகில் 2015ஆம் ஆண்டு அறிமுகமான இவர், தற்போது கிட்டத்தட்ட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து விட்டார்.
சிறு வயதில் இருந்தே படங்களில் நடிக்க பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தது. குழந்தையாக நடித்து வந்த கீர்த்தி, இப்போது நாயகியாக மாறியுள்ளார்.
தேசிய விருது வெல்லும் அளவிற்கு இன்று மிகச் சிறந்த நடிகையாக மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது சில கிசு கிசுக்களில் சிக்கி வருகிறார்.
சமீபத்தில் பிரபல இசையமைப்பாளர் அனிருதை டேட்டிங் செய்வதாகவும் சில தகவல்கள் வெளியாகி வந்தது.
அதன் பின்னர் ஹிந்தி மொழியில் நடித்துவரும் "பேபி ஜான்" என்கின்ற திரைப்படத்தில் ஹீரோவோடு மிக நெருக்கமாக நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது.
தற்போது தன்னை விட இளம் நடிகரை அவர் காதலித்து வருவதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், அதற்கு பதில் அளித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
அதன்படி தளபதி விஜய் ஸ்டைலில்.. "ஒரு வதந்தியை பற்றி நாம் பேசும்பொழுது அது உண்மையாகி விடுகிறது. ஆகவே அதை பற்றி பேசாமலிருந்து அதை தவிர்த்துவிடுவதே சரியான வழி" என்றார்