நடிகை மாளவிகாவின் உண்மையான பெயர் ஸ்வேதா கொன்னூர் மேனன். படத்திற்காக தனது பெயரை மாற்றிக்கொண்டார்.
90 மற்றும் 2000 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தார் மாளவிகா. தெலுங்கு, தமிழ், கன்னட படங்களில் நடித்தார்.
சுந்தர் சி இயக்கத்தில் அஜித் குமாருடன் 1999 ஆம் ஆண்டு வெளியான உன்னை தேடி என்ற படத்தில் அறிமுகமானார்.
இந்த படம் வெற்றியாகி தனது 19வது வயதிலேயே நடிகையாக அறிமுகமாகி புகழின் உச்சியில் இருந்தார் மாளவிகா.
பிறகு மீண்டும் ஆனந்த பூங்காற்றே படத்தில் அஜித்துடன் ஜோடியாக நடித்தார். ரோஜாவனம் திரைப்படத்தில் சிறப்பாக நடித்து இருந்தார்.
2000 முதல் 2003 வரை பல வெற்றி படங்களில் நடித்தார் மாளவிகா. வெற்றி கொடி கட்டு மற்றும் சீனு படங்களில் நடித்து இருந்தார்.
வெற்றி கொடி கட்டு படத்தில் கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு பாடலின் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.
2007ம் ஆண்டு சுரேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.