மஞ்சும்மல் பாய்ஸ் செய்த செட்டில்மெண்ட்.. இத்தனை கோடி வாங்கினாரா இளையராஜா?

';

மஞ்சும்மல் பாய்ஸ்

சிதம்பரம் இயக்கத்தில் மலையாளத்தில் பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

';

மஞ்சும்மல் பாய்ஸ் வசூல்

இந்தப் படம் நாடு முழுக்க பட்டிதொட்டி எல்லாம் ஹிட் அடித்து, 200 கோடி ரூபாய்க்கு மேல் வாரிக்குவித்து வசூல் சாதனை படைத்தது.

';

கண்மணி அன்போடு காதலன்

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் கிளைமேக்சில் நடிகர் கமல்ஹாசன் நடித்த குணா திரைப்படத்தின் ‘கண்மணி அன்போடு காதலன்’ என்ற பாடலை படக்குழு பயன்படுத்தியது.

';

மஞ்சும்மல் பாய்ஸ் ஹிட்

33 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இந்த பாடல், மீண்டும் பிரபலமானது மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தினாலே.

';

இளையராஜா நோட்டீஸ்

இந்த பாடலை பயன்படுத்த இசையமைப்பாளர் இளையராஜாவிடம் அனுமதி கோரவில்லை என்பதால் 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி நோட்டீஸ் அனுப்பினார்.

';

பேச்சுவார்த்தை

இதன் பின்னர் இளையராஜா தரப்பு, மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

';

60 லட்சம் ரூபாய் இழப்பீடு

இறுதியாக இளையராஜா இழப்பீடாக 60 லட்சம் ரூபாயை தயாரிப்பாளர்கள் இறுதியாக கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தற்போது இந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

';

VIEW ALL

Read Next Story